| ADDED : டிச 02, 2025 04:50 AM
செ ன்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சந்திப்பில் இருந்து, குன்றத்துார் சாலை பிரிந்து செல்கிறது. அதேபோல, பிள்ளைப்பாக்கம் சிப்காட் மற்றும் மணிமங்கலம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த முக்கிய சந்திப்பில் உள்ள இரும்பு மின்கம்பத்தில், தனியார் வீட்டுமனை விற்பனை குறித்த விளம்பர பலகை கட்டப்பட்டுள்ளது. மழையுடன், காற்று வேகமாக வீசும் போது, விளம்பர பேனர், சாலையில் விழும் நிலையில் தொங்குகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள விளம்பர பலகையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஏ. முரளி, ஸ்ரீபெரும்புதுார்.