உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்

 தாமல் ஏரியை பார்வையிட்ட ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள்

காஞ்சிபுரம்: தாமல் ஏரியை, ஜார்ஜியா நாட்டு வங்கி அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராமத்தில் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை, உலக வங்கி நிதியுதவியுடன் சீரமைக்கப்பட உள்ளது. இதை, ஐரோப்பியாவில் உள்ள ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள், நேற்று தாமல் ஏரியை பார்வையிட்டனர். அவர்களுக்கு, தாமல் ஏரி நீர்ப்பாசன சங்க தலைவர் பாலு, ஊராட்சி தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஏரி நிரம்பினால், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறுவது, ஏரி நீரை பாசனத்திற்கு திறந்து விடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை நீர்வள துறையினர், அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை