உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

 அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் சேதமடைந்து உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை, அசம்பாவதத்திற்கு முன் சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், தாசில்தார் அலுவலகம் அருகே இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி நுழைவாயில் அருகே, சுற்றுச்சுவர் சேதடைந்து உள்ளது. செங்கற்கள் பெயர்ந்து சுற்றுச்சுவர் பலவீனம் அடைந்து விழும் நிலையில் உள்ளதால்,மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மாணவியரின் பாதுகாப்பை கருதி, சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை