உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தேர்தல் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

தேர்தல் விழிப்புணர்வு வாகனம் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.மேலும், விழிப்புணர்வு வாகனமும், கையெழுத்து இயக்கத்தையும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையேயும், மகளிர் உதவிக் குழுவினரிடையேயும் நடந்த கோலப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றோருக்கு கலெக்டர் கலைச்செல்வி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கோட்டாட்சியர் ரம்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்