மேலும் செய்திகள்
புதுப்பொலிவு பெறுகிறது காஞ்சி சர்வதீர்த்த குளம்
1 minutes ago
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு
3 minutes ago
குழந்தைகள் பாதுகாப்பு பற்றி ஆணையம் ஆய்வு
6 minutes ago
காஞ்சிபுரம்: ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் செங்கழுநீராடை வீதி சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில் இருந்து, காமாட்சியம்மன் கோவிகு செல்வோர், கோவில் பின்புறம் உள்ள வடக்கு மற்றும் மேற்கு மாட வீதி வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவுநீராலும், மழையின் காரணமாகவும், செங்கழுநீரோடை வீதியுடன், மாட வீதி இணையும் இடத்தில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், செங்கழுநீரோடை வீதியில் இருந்து கோவில் பின்புறம் உள்ள மாட வீதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும். ஜல்லி கற்களால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர்' ஆகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago