உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தடுப்புச்சுவர் இல்லாத வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 தடுப்புச்சுவர் இல்லாத வடிகால்வாய் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், இரவு நேரத்தில் வளைவில் திரும்பும்போதும், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, ராகவேந்திரா நகரில் சாலையோரம் உள்ள கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ