| ADDED : டிச 07, 2025 05:51 AM
காஞ்சிபுரம்: தென்னேரி நீர்வரத்து கால்வாயோரம் தடுப்பு கம்பி இல்லாததால், பரந்துார் சாலை வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் - பரந்துார் சாலையில், தென்னேரி ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தரைப்பாலம் வழியாக, பொன்னேரிக்கரை, காரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பரந்துார், ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நீர் வரத்து கால்வாயோரத்தில், ஒரு அடிக்கு மட்டுமே தடுப்பு சுவர் உள்ளது. அதை ஓட்டி தடுப்பு கம்பிகள் ஏதுவும் இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் வாகனம் விபத்தில் சிக்கும் போதும், முன்புற டயர் வெடித்து நிலை தடுமாறி செல்லும் போது, கால்வாய் பள்ளத்தில் கவிழும் அபாயம் உ ள்ளது. என வே,பொன்னேரிக்கரை - பரந்துார் சாலையோரம் இருக்கும், தென்னேரி கால்வாய் தரைப்பா லம் ஓரத்தில் தடுப்பு கம்பி அமைக்க வேண் டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.