உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தீர்மானித்த பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரி மனு

 தீர்மானித்த பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரி மனு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி, 10வது வார்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து முடிக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாவிடம், 10வது வார்டு கவுன்சிலர் சிவசங்கரி நேற்று மனு அளித்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, வாலாஜாபாத் 10வது வார்டில், தாசப்ப சுபேதர் குறுக்குத் தெரு, நடேச அய்யர் தெரு பகுதிகளில் கான்கிரீட் சாலை ஏற்படுத்த ஏற்கனவே பேரூராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தேவையான நிதி ஒதுக்கீடு இதுவரை செய்யப் பட வில்லை. இதனால், அப்பணிகள் கிடப்பில் உள்ளதோடு அப்பகுதி மக்கள் மழைக் காலங்களில் சகதியான சாலையில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ