உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மின் தகன சுடுகாடு அமைக்கும் இடத்தை மாற்றக்கோரி புளியம்பாக்கம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

 மின் தகன சுடுகாடு அமைக்கும் இடத்தை மாற்றக்கோரி புளியம்பாக்கம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: 'வாலாஜாபாத் பேரூராட்சி எல்லையில் அமைய உள்ள, மின் தகன சுடுகாடை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' என எதிர்ப்பு தெரிவித்து புளியம்பாக்கம் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் வேலைவாய்ப்பு, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, பட்டா என, பல வகையான கோரிக்கைகள் தொடர்பாக 227 பேர் மனு அளித்தனர். பொதுமக்களிடமும், மாற்றுத்திறனாளிகளிட மு ம் மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி கோரிக்கை களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், வாலாஜாபாத் பேரூராட்சி எல்லையில், மின் தகன சுடுகாடு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புளியம்பாக்கம் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: புளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே, வாலாஜாபாத் பேரூராட்சி எல்லையில், மின் தகன சுடுகாடு அமைக்கப்பட இருப்பதால், எங்கள் பகுதியில் வசிப்போருக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின் தகன சுடுகாடு வாயிலாக வெளியேறும் புகையால் நாங்கள் பாதிக்கப்படுவோம். ஏற்கனவே, வல்லப்பாக்கம் கிராமத்தில் சுடுகாடு அமைக்க முடிவு செய்யப்பட்டு, கிராம மக்கள் எதிர்ப்பால் புளியம்பாக்கம் அருகே மாற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால், மின் தகன சுடுகாடு அமைப்பதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை