உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலவாக்கம் - ஒரகடம் நேரடி பஸ் வசதி தேவை

சாலவாக்கம் - ஒரகடம் நேரடி பஸ் வசதி தேவை

சாலவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த பொற்பந்தல், சித்தனக்காவூர், தண்டரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், ஒரகடம் பகுதியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.தொழிற்சாலைகளுக்கு செல்ல வசதியாக, ஒரு சில தொழிற்சாலைகள் வாயிலாக மட்டும் வேன் மற்றும் பேருந்து இயக்கப்படுகிறது. எனினும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அத்தகைய வாகன வசதி இல்லை.இதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களிலும், அரசு பேருந்து வாயிலாகவும் பயணித்து ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.ஒரகடத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லாததால், வாலாஜாபாத் அல்லது செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பேருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதனால், தொழிலாளர்கள் பலர் அலைச்சலுக்கு உள்ளாவதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாமல் சிரமபடுகின்றனர்.எனவே, சாலவாக்கம் சுற்றுவட்டார கிராமங்கள் வழியாக ஒரகடம் செல்ல நேரடி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி