உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மழைநீரால் சேதமாகும் சித்தாலப்பாக்கம் சாலை

 மழைநீரால் சேதமாகும் சித்தாலப்பாக்கம் சாலை

உத்திரமேரூர்: சித்தாலப்பாக்கத்தில், மலை ஓடை நீர் வெளியேறும் சாலை பகுதியில், சிறுபாலம் ஏற்படுத்தி சாலை சேதத்தை தவிர்க்க கோரிக்கை எழுந்துள்ளது. உத்திரமேரூர் ஒன்றியம், மதுாரில் இருந்து சித்தாலப்பாக்கம் வழியாக படூர் கூட்டுச்சாலை செல்லும் சாலை உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் இச்சாலையை பயன்படுத்தி, வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் , மதுார் மலை ஓடையில் இருந்து வரும் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால், மதுாரில் இருந்து சித்தாலப்பாக்கம் நோக்கி செல்லும் அச்சாலையின் தாழ்வான பகுதி வழியாக கடந்து சித்தாலப்பாக்கம் ஏரி கால்வாயில் செல்கிறது. இதனால், அச்சாலையில் பள்ளங்கள் மற்றும் சாலை ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டும் சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால், அச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மதுார் மலை ஓடையில் இருந்து மழைநீர் வெளியேறும் சித்தாலப்பாக்கம் சாலை பகுதியில் சிறுபாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை