உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இறந்த சகோதரரின் உடலை பார்த்து சகோதரி உயிரிழப்பு

இறந்த சகோதரரின் உடலை பார்த்து சகோதரி உயிரிழப்பு

சேலையூர்: இறந்த சகோதரரின் உடலை பார்த்து கதறி அழுத அவரது அக்கா, திடீரென மயங்கி விழுந்து இறந்தது, உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தோர் வின்சென்ட் ஆரோக்கியநாதன், 72, வேளாங்கண்ணி தாமஸ், 77. இருவரும், உடன் பிறந்தவர்கள். வின்சென்ட் ஆரோக்கியநாதன், நுங்கம்பாக்கத்தில் வீட்டை காலி செய்து, கூடுவாஞ்சேரியில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம், திடீரென உடல்நல குறைவால் வின்சென்ட் ஆரோக்கியநாதன் இறந்தார். அவரது உடல், கிழக்கு தாம்பரம், பாரதமாதா தெருவில் உள்ள உறவினர் வீட்டில், அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தன் தம்பி இறந்ததை அறிந்த வேளாங்கண்ணி தாமஸ், கதறி அழுதபடியே அஞ்சலி செலுத்துவதற்காக, நுங்கம்பாக்கத்தில் இருந்து கிழக்கு தாம்பரத்திற்கு வந்தார். தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதபோது, திடீரென மயங்கி விழுந்த வேளாங்கண்ணி தாமஸ், அங்கேயே உயிரிழந்தார். தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரிழந்த சம்பவம், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை