உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் ஸ்ரீபெரும்புதுார் வாகன ஓட்டிகள் அவதி

 தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரால் ஸ்ரீபெரும்புதுார் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால், ஸ்ரீபெரும்புதுாரில் சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் நெரிசல் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாளொன்றிக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் வாகன விபத்துகளை தவிர்க்கும் வகையில், 654 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு வழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக விரிவாக்கம், 18 இடங்களில் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலமும் கட்டும் பணி நடந்து வருகின்றன. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயலால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்த்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் சாலையின் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து மழைநீர் சாலையில் தேங்கியது. ஸ்ரீபெரும்புதுார் 'செக்போஸ்ட் ஆர்ச்' அருகே சாலையில் தேங்கிய மழைநீரால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வரும் நிலையில், சாலை நடுவே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் ஊர்ந்து சென்றன. இதனால், சாலை விரிவாக்க பணிகளை துரிதப்படுத்தி, விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை