| ADDED : டிச 02, 2025 04:49 AM
கா ஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக, 10 ஆண்டுகளுக்குமுன், ஆழ்துளை குழாய் வசதியுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு பிற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் தொட்டியும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஏ.ராஜ்குமார், காஞ்சிபுரம்.