உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஸ்கூட்டரை திருடிய வாலிபர் கைது

 ஸ்கூட்டரை திருடிய வாலிபர் கைது

சென்னை: சென்னை, பெரம்பூர், நீல்ஸ் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரீத்தி, 24; துரைப்பாக்கத்தில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 16ம் தேதி மாலை, தன் 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரை, பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் அருகே, பெரவள்ளூர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்தார். பின் அது காணவில்லை. பெரவள்ளூர் போலீசார் விசாரணையில், ஸ்கூட்டரை திருடியது ஓட்டேரி, பழைய வாழைமாநகரைச் சேர்ந்த மகேஷ், 27, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஸ்கூட்டர் மீட்கப்பட்டு, போலீசார் மகேசை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ