திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்
கரூர்: கரூர்--- திருச்சி சாலை வீரராக்கியம் அருகில் சென்டர் மீடியன் இடைவெளியை கடந்து செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது.கரூர் - --திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், புலியூர் பகுதியில் சிமென்ட் தொழிற்சாலை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்தை ஒழுங்குப்ப-டுத்தும் நோக்கில், வீரராக்கியத்தில் இருந்து புலியூர் வரை, சாலை நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடக்க வசதி-யாக, சென்டர் மீடியன் நடுவில் கான்கிரீட் கற்களை அகற்றி விட்-டுள்ளனர். இதனால், பாதசாரிகள் கடந்து செல்லும் போது, விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிலும், வீரராக்கியம் அருகில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சென்டர் மீடியனில் உள்ள கல்லை அகற்றி உள்ளனர். அதன் வழியாக மக்கள் செல்-கின்றனர். சில இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் புகுந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் சென்டர் மீடியனை கடந்து செல்லும் போது, வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சென்டர்மீடியன் இடைவெளியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.