உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆரியூர் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஆரியூர் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

அரவக்குறிச்சி, ஆரியூர், கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.அரவக்குறிச்சி அருகே ஆரியூர் பகுதியில் அமைந்துள்ள, விநாயகர், கருப்பண்ணன், நாகம்மாள், அங்காளம்மன், வீரமர்த்தியம்மன், வீரபுத்திரர், கன்னி மார், பொம்மி வெள்ளையம்மாள், மதுரவீரன் சுவாமி ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே, பிரத்யேகமாக யாகசாலை அமைத்து முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.அதன் தொடர்ச்சியாக யாக சாலையில் இருந்து, பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க, தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரம் வந்தடைந்தனர்.பின்னர், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு விநாயகர், கருப்பண்ண சுவாமி, நாகம்மாள், அங்காளம்மன், வீரமர்த்தியம்மன், வீரபுத்திரர், கன்னி மார், பொம்மி வெள்ளையம்மாள், மதுரவீரன் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் மக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை