உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே

மின் கம்பத்தில் படர்ந்த செடிகளை அகற்றலாமே

கரூர், புலியூர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, பி.வெள்ளாளபட்டியில் மின் கம்பம் மீது, செடிகள் அதிக அளவில் படர்ந்து வளர்ந்துள்ளன. இதனால், மின் கம்பத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்ய முடியாமல், மின்வாரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர். தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளது. மின் கம்பங்களில் படர்ந்து வளர்ந்துள்ள செடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை