உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டில் நகைகளை திருடியவருக்கு வலை

வீட்டில் நகைகளை திருடியவருக்கு வலை

குளித்தலை,குளித்தலை, சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்புசாமி மனைவி பொன்னீஸ்வரி, 42. இவர் தனது வீட்டில், கட்டுமான தொழிலுக்காக கொத்தனாரை அழைத்து இருந்தார். கடந்த, 4ம் தேதி மாலை, 4:00 மணியளவில் திருச்சி தென்னுார் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜெகநாதன், 37, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த இரண்டு கிராம் நாணயம், நான்கு கிராம் தோடு ஆகியவைகளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து, பொன்னீஸ்வரி கொடுத்த புகார்படி, ஜெகநாதன் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை