கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் வெண்டைக்காய் சாகுபடி பணி
கிருஷ்ணராயபுரம், :கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வெண்டைக்காய் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையஜெயங்கொண்டம், புதுப்பட்டி, லட்மணம்பட்டி, கணக்கம்பட்டி, வயலுார், அந்தரப்பட்டி, புனவாசிப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள வெண்டைக்காய் செடிகளில், காய்கள் பிடித்து வருகிறது.காய்கள் பறிக்கப்பட்டு கரூர், குளித்தலை, முசிறி, தோகைமலை பகுதிகளில் செயல்படும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது. நேற்று வெண்டைக்காய் கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, விளைச்சல் குறைவு காரணமாக வெண்டைக்காய் வரத்து சரிந்துள்ளது.