உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

சாலை அமைத்த 3 மாதத்தில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம்

கரூர்: கரூரில், சாலை அமைத்த, 3 மாதங்களிலேயே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமாகி வருகிறது.கரூர் மாநகராட்சி, 3வது மண்டலத்திற்குப்பட்ட, 14வது வார்டு பாலாஜி நகர் மற்றும் எஸ்.வெள்ளாளப்பட்டியில் சிமென்ட் சாலை உள்ளது. பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. பலமுறை கோரிக்கை விடப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து, செப்., மாதத்தில் சாலை அமைக்கப்பட்டது.சிமென்ட் சாலை அமைத்து, 3 மாதங்களே ஆன நிலையில், தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மேலும் சேதமாக வாய்ப்பு அதிகம். நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை தரமில்லாமல் போடப்பட்டதால் குறுகிய காலத்திலேயே சேதமடைந்துள்ளது. எனவே, சேதமடைந்து வரும் சாலையை, உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை