உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் மாணவர் உயிரிழப்பு

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் மாணவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டிகாலனி பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு, இளம் பெண் படுகாயம். சிவகங்கை மாவட் டம், தேவகோட்டையை சேர்ந்த ராமு என்பவரது மகன் முத்தழகன், 23. இவர் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரும், கல்லுாரி தோழியான நட்சத்திரா, 23, என்பவரும் டாடா இண்டிகா விஸ்டா காரில், கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 4ம் தேதி மதியம் 2:00 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டி காலனி அருகே, கருப்பண்ணசாமி கோவில் அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவ ரையும் மீட்டு மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். விபத்து தொடர்பாக முத்தழகன் தந்தை ராமு அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.x


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை