குழாய் விரிசலால் வீணாகும் நீர்
கிருஷ்ணராயபுரம், கோவக்குளம் கிராம சாலையில், காவிரி குழாயில் விரிசல் ஏறப்பட்டு தண்ணீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் கிராம சாலை வழியாக காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாய் வழியாக செல்லும் தண்ணீர், தொட்டியில் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கோவக்குளம் அருகில் சாலையோரம் வழியாக செல்லும் குழாயில், விரிசல் ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. எனவே, விரிசல் அடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.