உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பி வாய்க்காலில் வெளியேறும் நீர்

பாப்பாரப்பட்டி ஏரி நிரம்பி வாய்க்காலில் வெளியேறும் நீர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி ஏரி, மழை நீரை ஆதாரமாக கொண்டு அமைக்கப்பட்டதால், மழை பெய்தாலும், படேதலாவ் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறினாலும், ஏரிக்கு தண்ணீர் வந்து விடும். இதனால், ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்-படும். இந்த ஏரி நீர் மூலம் கடந்த, 10 ஆண்டுக்கு முன்பு வரை, 30 ஏக்கரில் விவசாயம் நடந்தது. அதன் பின்னர் ஏரியை சுற்றி கட்டப்பட்ட கட்டடங்கள், வீடுகள் மற்றும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள், நேரடியாக ஏரிக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், பழையபேட்டையில் இருந்து வரும் கழிவு நீரும் நேரடியாக ஏரியில் கலந்து வருகிறது. இதனால் ஏரி நீர் மாசடைந்து, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், ஏரி கீழ் பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு, நிலம் தரிசாக மாறியுள்ளது. ஏரியும் ஆண்டுக்கு ஒரு முறை மட்-டுமே நிரம்பி வருகிறது. இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால், சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.கடந்த, 10 நாட்களாக கிருஷ்ணகிரியில் மழை பெய்வதால் பாப்-பாரப்பட்டி ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி, வாய்க்கால் மூலம் அவதானப்பட்டி ஏரியில் சேர்கிறது. தண்ணீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்புகளாலும், முட்புதர்களாகவும் உள்ளதால், தண்ணீர் முழுவதும் ஏரிக்கு சென்று சேருவதில்லை. பாப்பாரப்பட்டி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, வாய்க்-காலை துாய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை