உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் தொட்டு விடும் துாரத்தில் ஆபத்து

ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் தொட்டு விடும் துாரத்தில் ஆபத்து

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்திற்கு, வாரத்தில் திங்கட்கிழமை மட்டுமின்றி, தினமும் பல்வேறு தேவைகளுக்காக, ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.சப் - கலெக்டரின் ஜீப்பை நிறுத்தும் இடத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில், விளக்குகளுக்கான சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. இது, மின்கம்பத்தில் சிறுவர்கள் கூட தொட்டு விடும் துாரத்தில் உள்ளது. மேலும், பாக்ஸ் இல்லாமல் சுவிட்ஸ் மட்டும், அதுவும் திறந்த நிலையில் உள்ளதால், மழையின் போது அதில் தண்ணீர் இறங்கி, மின்கசிவு ஏற்பட்டு, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. திறந்த நிலையில் ஒயர்கள் இணைக்கப் பட்டுள்ளது மற்றும் சிறுவர்கள் தொடும் உயரத்தில் சுவிட்ச் உள்ளது, பெரும் மின் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.இது, சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி மற்றும் அலுவலக ஊழியர்கள் கண்ணில் இதுவரை படவில்லையா என, மக்கள் கேட்கின்றனர். சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு ஏ‍தேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்வாரியத்தினர் சுதாரித்து, கம்பத்தில் திறந்தநிலையில் ஆபத்தான முறையில் அமைத்துள்ள சுவிட்சை மாற்றுவதோடு, அதற்கு பாக்ஸ் அமைத்து பாதுகாப்பாக வைக்க மக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ