உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு

1,578 பேருக்கு ரூ.8.44 கோடி நலத்திட்ட உதவிகள் தேர்தல் நேரத்தில் தி.மு.க., நாடகம் என குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி கிருஷ்ணகிரியில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கண்துடைப்பு நாட-கத்தை, தி.மு.க., அரங்கேற்றி வருவதாக, எதிர்-கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்-டூர்புரத்தில் தாயுமானவர் திட்டம், கல்வி, சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி-களை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் கட்-டப்பட்ட புதிய கட்டடங்களையும் காணொலியில் திறந்து வைத்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரியில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்-பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.இது குறித்து, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., நிர்வா-கிகள் கூறுகையில், 'தேர்தல் நேரம் நெருங்கு-வதால், தி.மு.க., தொடர் கண்துடைப்பு நாட-கத்தை அரங்கேற்றி வருகிறது. தி.மு.க., ஆட்-சியில் பல்வேறு துறைகள் முடங்கி உள்ளன. மாங்காய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை. ஆதிதிராவிடர்களுக்கு என வழங்கப்பட்ட நிலங்கள், பலருக்கு வழங்கப்பட-வில்லை. பல இடங்களில் சிலரால் அபகரிக்கப்-பட்டுள்ளன.இதற்கு முறையான நடவடிக்கை இல்லை. இந்நி-லையில், 1,578 பேருக்கு, 8.44 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் என்ற பெயரிலும், ஏற்க-னவே கடன் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு மீண்டும் கடன் வழங்கியும் உள்ளனர். இது-போன்ற செயல்களால் மக்கள், தி.மு.க., ஆட்-சியை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ