மேலும் செய்திகள்
மத்திய மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம்
01-Nov-2025
பென்னாகரம், பென்னாகரத்தில், தி.மு.க.,வின், 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட துணைச்செயலாளர் உமாசங்கர் தலைமை வகித்தார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்கள், 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் இன்பசேகரன், தர்மசெல்வன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மடம் முருகேசன், ஏரியூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஷர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் பையர்நத்தத்தில் நடந்தது.
01-Nov-2025