உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி

திறக்க படாத துணை சுகாதார நிலையம்:மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி,:தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மோட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு, பெத்தானூர், மோட்டாங்குறிச்சி, பச்சஹள்ளி புதூர், கெட்டூர் மோட்டாங்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இதில், 5,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி க்காக நத்தமேடு கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் வராததால், சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளது.அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவ சிகிச்சை பெற கடத்துார், பொம்மிடி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்ற நிலை உள்ளது. துணை சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை