மேலும் செய்திகள்
கே.ஆர்.பி., அணைக்கு மழையின்றி நீர்வரத்து சரிவு
18-Nov-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 766 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பால், தென்பெண்ணை ஆற்றில், 766 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. கர்நாடகா மாநில நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழையால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 891 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயர-மான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 771 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. அணையின் வலது, இடது பாசன கால்வாய்களில் நீர் திறக்கப்படவில்லை. வரும் நாட்களில் அணையின் நீர்வரத்தை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்படும் என, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
18-Nov-2025