உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வித்துறையில் கனவாகும் கருணை நியமனங்கள் 1600 பேர் காத்திருப்பு

கல்வித்துறையில் கனவாகும் கருணை நியமனங்கள் 1600 பேர் காத்திருப்பு

மதுரை: தமிழக கல்வித்துறையில் கருணை அடிப்படையிலான நியமனங்கள் முறையாக நடக்காததால் தற்போது 1600க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின்போது இறந்தாலோ, மருத்துவ காரணமாக பணி செய்ய இயலாமை ஏற்பட்டாலோ அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனைத்துத் துறைகளிலும் இவ்வகை பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால் கல்வித்துறையில் 2015 -2016 க்கு பின் பெரும்பாலும் நியமிக்கப்படவில்லை. இதனால் தற்போது வரை 1600க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையிலான நியமனங்களுக்கு காத்திருக்கின்றனர். பிற துறைகளில் உள்ளது போல் கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் இவ்வகை பணி நியமனங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: வருவாய், வேளாண், மின்வாரியம், வனம், பொதுப்பணி உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் இவ்வகை நியமனங்களை உரிய காலத்தில் மேற்கொள்கின்றனர். கல்வித்துறையில் பெரும்பாலும் ஜூனியர் அசிஸ்டெண்ட் நியமனங்களே அதிகம் இருக்கும். இப்பணிக்கு காத்திருக்கும் சிலர் 50 வயதை அடைந்துவிட்டனர். இன்னும் நியமிக்கவில்லை என்றால் சிலர் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பிற துறைகளை விட கல்வித்துறையில் தான் பணியிடங்களும், காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. கல்வித்துறையில் இவ்வகை நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை