ஆனைமலைஸ் கார் முகாம்
மதுரை : கப்பலுார் ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தின் ஹைலக்ஸ் வாகனத்தின் பூட் கேம்ப் நிகழ்வை எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் பயிற்சி ஏ.எஸ்.பி., ஆசிஸ் புனியாத், எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் ஸ்ரீ சக்தி துவக்கி வைத்தனர். வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி 25க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வாகனத்தின் சிறப்பு அம்சங்கள், புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை முதன்மை மேலாளர் கார்த்திகேயன், விற்பனை மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் வினோத்குமார் செய்திருந்தனர்.