உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சர்ச்சை அரசியல் உதயகுமார் கருத்து

 சர்ச்சை அரசியல் உதயகுமார் கருத்து

மதுரை: ''மதுரையில் சர்ச்சை அரசியலை முன்னெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மதுரை மக்களின் வளர்ச்சிக்கு அக்கறை செலுத்தவில்லை'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் தெரிவித்தார். அவர் தெரிவித்துள்ளதாவது: மதுரை குப்பை நகரமாக இருப்பது வேதனையாக உள்ளது. இதையெல்லாம் கவலைப்படாமல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'இது வளர்ச்சிக்கான திட்டமா' என முதல்வர் கேட்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியை அச்சுறுத்தும் வலிமையும், சிந்தனையும் தோன்றியதை பற்றி மதுரை மக்கள் கவலை கொண்டுள்ளனர். முதல்வர் மதுரைக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா. மதுரை மக்களின் வளர்ச்சிக்கு எந்த அக்கறையும் செலுத்தவில்லை. இன்றைக்கு சர்ச்சை அரசியலை முதல்வர் முன்னெடுக்கிறார். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ