உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நீர்வளத்துறை அலட்சியத்தால் பயிர்கள் ஒருபுறம் அழுகல்; மறுபுறம் கருகல்

 நீர்வளத்துறை அலட்சியத்தால் பயிர்கள் ஒருபுறம் அழுகல்; மறுபுறம் கருகல்

மேலுார்: வெள்ளலுாரில் நீர் வழிப்பாதையை பராமரிக்காததால் பயிர்கள் பாழாகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலுார் - சிவகங்கை ரோடு வெள்ளலுாரில் ஒரு பகுதியில் நீர்வளத்துறைக்கு சொந்தமான நுாறு ஏக்கர் பரப்பளவுள்ள சின்னபிடி கண்மாயும், மறுபுறம் 500 ஏக்கர் பரப்பளவில் சிறுமான் கண்மாயும் உள்ளது. ஒன்பதாவது கால்வாய் வழியாக வரும் தண்ணீரால் கண்மாய் நிரம்பி, ரோட்டைக் கடந்து எதிர் திசையில் உள்ள கண்மாய்க்கு செல்லும். இக் கண்மாய் தண்ணீரால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறும். நீர்வளத்துறையினர் கால்வாயை முறையாக பராமரிக்காததால் நிலங்களில் தண்ணீர் வெளியேறாமல் வயலுக்குள் தேங்கி நிற்கிறது. விவசாயி பாலன் கூறியதாவது: நீர் வழிப்பாதையை தனி நபர்கள் கல்லுக்கால் ஊன்றி ஆக்கிரமித்துள்ளனர். பாலத்தின் கீழ் தண்ணீர் வெளியேறும் வழியில் மணல் நிரம்பியுள்ளது. அதனால் ஒரு பகுதியில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழுக ஆரம்பித்துள்ளது. ரோட்டின் மறுபகுதியில் விவசாயம் செய்ய தண்ணீரின்றி கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகி வாழ்வாதாரமே பாதிக்கிறது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் வாங்கிய சொசைட்டி கடனை கட்ட முடியாமல் திகைக்கிறோம். நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறி 16 நாட்களாகியும் அகற்றவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றார். செயற்பொறியாளர் ஜெயராமன் கூறுகையில், ''ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ