கொளுஞ்சி, எருக்கலை தேடும் விவசாயிகள்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதியில் கொளுஞ்சி, எருக்கலை செடிகளை விவசாயிகள் தேடிச் சேகரித்து வயல்களில் அடியுரமாக பயன்படுத்துகின்றனர். மானாவாரி பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் நெல் பயிரிடும் பணிகளை துவக்கியுள்ளனர். ஏராளமான விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து வருகின்றனர். நெல் நடவு செய்யும் நிலங்களை வளமாக்கும் வகையிலும், நோய் தாக்குதலில் இருந்த நெற்பயிர்களை காக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கையாக கொளுஞ்சி, எருக்கலை செடிகளை அடியுரங்களாக போட்டு நிலத்தை பண்படுத்துகின்றனர். இதற்காக விவசாயிகள் கொளுஞ்சி, எருக்கலை செடிகளை சேகரித்து வருகின்றனர்.