உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்

 ஆபத்தான குடிநீர் தொட்டியால் அச்சம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் பயன்பாடற்ற மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டுமென அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். இங்கு காடுபட்டி- - விக்கிரமங்கலம் ரோட்டில் ரேஷன் கடை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தொட்டி அமைக்கப்பட்டது. சேதமடைந்ததாலும் சிறிய தொட்டியாக இருந்ததாலும் இதன் அருகே புதிய தொட்டி அமைக்கப்பட்டது. இதனால் பழைய தொட்டி கைவிடப்பட்டு பயன்பாடின்றி சேதமடைந்தது. பல இடங்களில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. சுற்றிலும் புதர் மண்டியுள்ளது. இரண்டு தொட்டிகளும் அருகருகே உள்ளதால் பாதை குறுகி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.எனவே ஒன்றிய அதிகாரிகள்தொட்டியை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை