உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குப்பை நகரம் மதுரை த.வெ.க.,வினர் மனு

 குப்பை நகரம் மதுரை த.வெ.க.,வினர் மனு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் முகாமில், வார்டு பிரச்னை குறித்து த.வெ.க., வடக்கு மாவட்ட செயலாளர் கல்லானை மனு அளித்தார். அவர் கூறியதாவது: புதுார் 12வது வார்டு பாண்டியன் நகர் பகுதியில், பல ஆண்டுகளாக கழிவுநீர் வாய்க்கால் துார்வாரப்படாமல் பாதாள சாக்கடை நிரம்பி தெரு முழுதும் தேங்கியுள்ளது. குடிநீரில் புழுக்கள், துர்நாற்றம் ஏற்பட்டு பலரும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சேதமடைந்த 'சிலாப்'களால் நடக்க முடியவில்லை. 'குப்பை நகரம்' என மதுரை பெயர் பெற்ற போதும்,அதை சரி செய்வதற்கான முயற்சியை யாரும் எடுக்கவில்லை. விளம்பர மாடலாக மட்டுமே தற்போதைய ஆட்சி செயல்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் நகரின் பல பகுதிகளில் ரோடு, சாக்கடை பிரச்னை நீடிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை