உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  புதிய சிந்தாமணி, மாடக்குளம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

 புதிய சிந்தாமணி, மாடக்குளம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

மதுரை: மதுரை நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிந்தாமணி, மாடக்குளம் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு எல்லைகள் பிரிக்கப்பட்டு பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகரில் சட்டம் ஒழுங்கு, மகளிர் ஸ்டேஷன் என 30 ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனின் எல்லை பெரியது. அதேபோல் கீரைத்துரை போலீஸ் ஸ்டேஷனின் எல்லையும் விரிவடைந்தது. இதனால் நிர்வாக வசதிக்காக இவ்விரு ஸ்டேஷன்களின் எல்லைகளை பிரித்து புதிதாக சிந்தாமணி, மாடக்குளம் ஸ்டேஷன்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்காலிகமாக சிந்தாமணி ஸ்டேஷன் அனுப்பானடி - சிந்தாமணி ரோட்டில் ஓம்முருகா நகரில் வாடகை கட்டடத்தில் செயல்பட உள்ளது. இதன் முதல் இன்ஸ் பெக்டராக பிரேமா சாந்தகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கீரைத்துரை குற்றப்பிரிவில் இருந்தார். சிந்தாமணி ஸ்டேஷனிற்குகீழ், அனுப்பானடியின் ஒரு பகுதி, மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு, சிந்தாமணி, ராஜம்மாள் நகர், கண்ணன் காலனி, வேலம்மாள் மருத்துவமனை, தாய் நகர், கங்கா நகர் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெறுகின்றன. மாடக்குளம் ஸ்டேஷன் மாடக்குளம் பெரியார் நகரில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்க உள்ளது. இதன் முதல் இன்ஸ்பெக்டராக கிரேஸ் சோபியபாய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் திலகர்திடல் குற்றப்பிரிவில் இருந்தார். மாடக்குளம், டோபி காலனி, ராகவேந்திரா நகர், ஜெய் நகர் மற்றும் பைபாஸ் ரோட்டில் ரயில்வே பாலம் முதல் காளவாசல் வரை இடதுபுறம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளும் மாடக்குளம் ஸ்டேஷனின் கீழ் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி