உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை அரசு மருத்துவமனையில் ஏலச்சீட்டு: 3 பேர் பணிநீக்கம்

 மதுரை அரசு மருத்துவமனையில் ஏலச்சீட்டு: 3 பேர் பணிநீக்கம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி அதை வீடியோவாக வெளியிட்ட, தனியார் நிறுவன தொகுப்பூதிய பணியாளர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட மருத்துவ, சுகாதார பணியாளர்கள், கேட் கீப்பர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் மகப்பேறு பிரிவில் லஞ்சம் வாங்கியதற்காக ஒரு பெண் உட்பட 3 தொகுப்பூதிய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுடன் தற்போதுள்ள பணியாளர்கள் 15 பேர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். சீட்டுப்பணம் கட்டியவர்களின் பெயர்களை காகிதத்தில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அந்தந்த மாத சீட்டுத்தொகை கொடுத்து வந்துள்ளனர். வீடியோ கசிந்தது இம்மாத சீட்டு குலுக்கல் நடந்த நிலையில் நிறுவன மேலாளர் ஜெய்க்கு தகவல் தெரிந்தது. மருத்துவமனைக்குள் ஏலச்சீட்டு நடத்தினால் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் ஏலச்சீட்டில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் நோக்கில் யாருக்கு சீட்டு விழுந்தது என்பதை வீடியோவாக எடுத்ததை, குழுவில் உள்ள ஒருவர் கசிய விட்டுள்ளார். சுவாமி கும்பிட்டு தனது பெயரின் சீட்டை எடுத்த பணியாளரின் வீடியோ பரவியது. இதையடுத்து ஜெய்யிடம் விசாரணை நடத்த ஆர்.எம்.ஓ., முரளிதரனுக்கு டீன் அருள் சுந்தரேஷ்குமார் உத்தரவிட்டார். ஏலச்சீட்டு குலுக்கிய பெண், வீடியோ எடுத்த பெண், ஏலச்சீட்டை எடுத்த ஆண் பணியாளரை பணிநீக்கம் செய்து மேலாளர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி