உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மண்பாண்ட தொழில்  செய்ய வசதி தேவை

 மண்பாண்ட தொழில்  செய்ய வசதி தேவை

மதுரை: மதுரையில், துவரிமான், பரவை உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலை குலத்தொழிலாக செய்யும் பலர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள அய்யனார் கோயில் திருவிழாவின் போது மண்பாண்ட பொம்மைகள், சாமி சிலைகள், குதிரைகள் உள்ளிட்டவற்றை நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவற்றை தயாரிக்க போதிய இடவசதி, மின்சார இணைப்பு இல்லாததால் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே இலவச வீட்டுமனை பட்டா, தொழில் செய்ய இடவசதி கோரி, அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சார மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் அய்யனார், செயலாளர் நாகமலை கண்ணன் உட்பட தொழிலாளிகள் பலர் மண்பானை, பொம்மைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை