| ADDED : டிச 07, 2025 08:50 AM
உசிலம்பட்டி: பாப்பாபட்டி கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தும் உசிலம்பட்டி - கீரிபட்டி வழியாக பாப்பாபட்டி செல்லும் ரோட்டை சீரமைக்கவில்லை. பல்லாங்குழி ரோட்டில் வரமுடியாமல் அடுத்தடுத்து பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு வருகிறது என கீரிபட்டி, பாப்பாபட்டி கிராமமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். உசிலம்பட்டி - -வத்தலக்குண்டு ரோட்டிலிருந்து மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, திம்மநத்தம் வழியாக பாப்பாபட்டி செல்லும் 10 கி.மீ., ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த 2021ல் பாப்பாபட்டியில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவரிடம் ரோட்டை சரிசெய்ய மனு கொடுத்தனர். அடுத்தடுத்து 4 ஆண்டுகளாக நடந்த கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் போட்டும் , அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் ரோடு சீரமைக்கப்படாமல் உள்ளது. வேல்முருகன், கீரிபட்டி: ரோட்டில் அடுத்தடுத்து பள்ளம் ஏற்பட்டு வாகனங்களில் செல்ல இடையூறாக உள்ளது. அவசரத்திற்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமறுக்கின்றனர். ரோடு சீரமைக்கப்படாததால் அதிகாலை 5:30 மணிக்கு உழவர்சந்தைக்கென வந்த பஸ்சையும், இரவு 9:00 மணிக்கு வந்த பஸ்சையும் நிறுத்திவிட்டனர். கேட்டால் வெளிச்சம் இல்லாத நேரத்தில் ரோட்டில் மேடுபள்ளங்களை பார்த்து பஸ் ஓட்ட முடியவில்லை' என்கின்றனர். முதல்வரிடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தும், கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் போட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.