மேலும் செய்திகள்
பசுமை பூமியை விட்டுச்செல்வோம்
26-Oct-2025
மதுரை: மதுரை ஜவஹர்புரத்தில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பில் மருதிருவர் 224வது நினைவு நாளையொட்டி, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் மருது மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒரு லட்சம் கன்றுகளை நடவேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவற்றுக்கு சின்ன மருது, பெரிய மருது என்று பெயரிட்டும் நடப்பட்டன. இதில் பேரவை நிறுவனர் கண்ணன், பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு முன்னாள் செயலாளர் ரவிராஜன் சந்திரன், நிர்வாகிகள் நாகராஜன், ஹரிகிருஷ்ணன், அக்னிராஜ், செந்தில், சமூகஆர்வலர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.
26-Oct-2025