உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை காமராஜ் பல்கலையில் துறைகள், குடியிருப்புகளில் திருட்டு போலீஸ் விசாரணை

 மதுரை காமராஜ் பல்கலையில் துறைகள், குடியிருப்புகளில் திருட்டு போலீஸ் விசாரணை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் துறைத் தலைவர் அறைகள், பேராசிரியர்கள் குடியிருப்புகளில் மர்ம நபர்கள் இன்வெர்ட்டர் பேட்டரி, வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். இப்பல்கலையில் 77 துறைகள் உள்ளன. ஆங்கிலம், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் துறைகள் ஒரே வளாகத்தில் செயல் படுகின்றன. இங்கு மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து இன்வெர்ட்டர் பேட்டரிகளை திருடிச் சென்றனர். மேலும் பேராசிரியர்கள் குடியிருப்பில் ஒருவரின் வீட்டில் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளனர். மற்றொரு பேராசிரியர் வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளனர். நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலை வளாகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. துறைகளில் நடந்த திருட்டு குறித்து தாமதமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருட்டு நடந்த பகுதிகளில் சில கண்காணிப்பு கேமராக்கள் மாயமாகியுள்ளன. பல ஆண்டுகளாக பல்கலை பொறியாளர் (யு.இ.,) பணியிடம் காலியாக இருந்த நிலையில், நவ., 14 ல் பொதுப்பணித்துறையை சேர்ந்த நிர்வாக பொறியாளர் நீலகண்டன் நியமிக்கப்பட்டார். இதுவரை அவர் பொறுப்பேற்கவில்லை. அவரை பொறுப்பேற்க விடாமல் அச்சுறுத்தும் வகையில் இது நடந்ததா என போலீசார் விசாரிக்க வேண்டும் என்றனர். பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் கூறுகையில், திருட்டு குறித்து எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ