உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ஊர்க்காவல் படை வீரர் கைது வாடிப்பட்டி: மதுரை மீனாம்பாள்புரம் தினேஷ்குமார் 34, ஊர்க்காவல் படையில் பணிபுரிகிறார். சமயநல்லுாரை அடுத்துள்ள சிறுவாலை மணிமேகலையை திருமணம் செய்து 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மணிமேகலையின் தங்கை நித்யாவை 21, தினேஷ்குமாரின் தம்பி மருதுக்கு பெண் கேட்டுள்ளனர். பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் இன்ஸ்டாகிராமில் நித்யா குறித்து அவதுாறு செய்திகளை பரப்பினார். சமயநல்லுார் போலீசார் தினேஷ்குமாரை கைது செய்தனர். மாணவி தற்கொலை வாடிப்பட்டி: கச்சைகட்டி பசும்பொன் நகர் கோபிகா 16, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். இவரது பெற்றோர் அருணா தேவி, நாகரத்தினம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இவரது அண்ணன் லிங்கேஸ்வரன் 19, மதுரையில் உள்ள கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். இருவரையும் தாய்மாமன் முத்துப்பாண்டி பராமரித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலிக்கு சிகிச்சை எடுத்து வந்த கோபிகா நேற்று முன்தினம் தோட்டத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் வளர்மதி, எஸ்.ஐ., சிவக்குமார் விசாரிக்கின்றனர். --மின்சாரம் தாக்கி பெண் பலி மதுரை: காளவாசல் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் பெண் ஊழியர் தேவிகா. நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் சுவிட்ச் பாக்ஸைதொட்ட போது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்க முயன்ற சக ஊழியர்களான லதா, கருப்பாயியும் மின்சாரம் தாக்கியதில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தேவிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி