உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் ரேஷன் கடை

தினமலர் செய்தியால் ரேஷன் கடை

கொட்டாம்பட்டி,: மணப்பசேரி ஊராட்சி காரியேந்தல் பட்டியில் 250க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இக் கிராமத்தில் கடை இல்லாததால் காரியேந்தல் பட்டி மக்கள் பல கி.மீ., தொலைவில் உள்ள மணப்பசேரிக்கு நடந்து சென்று நாள் கணக்கில் காத்துக் கிடந்து பொருள்களை வாங்கி வந்தனர்.வரும்போது அரிசி உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைவதால் கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதால் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து காரியேந்தல் பட்டியில் புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டதால் கார்டுதாரர்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ