உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அரசு பஸ் மோதி கவிழ்ந்த பள்ளி வேன்

 அரசு பஸ் மோதி கவிழ்ந்த பள்ளி வேன்

உசிலம்பட்டி: தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து நேற்று மதுரை சென்ற அரசு பஸ்சை டிரைவர் சவுந்திரபாண்டி 50, ஓட்டி வந்தார். 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரை ரோட்டில் கொங்கபட்டி அருகே மதியம் 12:10 மணிக்கு வந்தது. அப்போது உசிலம்பட்டி தனியார் பள்ளி வேனை அதன் டிரைவர் ஜேசுராஜ் ரோட்டின் மறுபக்கம் உள்ள பார்சல் சர்வீஸ் கோடவுனுக்கு செல்ல எவ்வித சமிக்ஞையும் காட்டாமல் திருப்பினார். அப்போது அரசு பஸ் மோதியதில் வேன் கவிழ்ந்தது. வேனில் யாரும் இல்லை. டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !