உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாடக மேடையில் தற்காலிக ரேஷன் கடை

 நாடக மேடையில் தற்காலிக ரேஷன் கடை

உசிலம்பட்டி: லிங்கநாயக்கன்பட்டியில் தற்காலிக ரேஷன் கடைக்கு இடம் கிடைக்காததால், நாடக மேடையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ளது லிங்கநாயக்கன்பட்டி. இங்கு தற்காலிக ரேஷன் கடை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இங்குள்ள வனத்துறையின் வனப்பாதுகாப்புக் குழுக் கட்டடத்தில் தற்காலிக ரேஷன் கடையை அமைக்கலாம் எனவும் தெரிவித்தனர். வனத்துறையினர் இது குறித்து உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று தற்காலிக ரேஷன் கடைக்கு பொருட்கள் வந்தன. வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் அருகில் உள்ள நாடகமேடையில் தற்காலிக ரேஷன் கடையை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார். தொடர்ந்து ரேஷன் கடைக்கு தனியாக புதிய கட்டடம் விரைவில் கட்டித்தருவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ