உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி

 பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் வாவிடமருதுார் ஊராட்சி ஆதிதிராவிடர் காலனியில் 60 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 2023ல் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை குடிநீர் விநியோகத்திற்கு வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டினர். கஸ்துாரி கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு முன் இப்பகுதி உருவானபோது அமைத்த இரு தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன. தண்ணீரின் தன்மை மாறியதால் குடிக்க, சமைக்க பயன்படுத்த முடியவில்லை. புதிதாக கட்டிய தொட்டியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஊராட்சி தலைவர் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டது. அதன்பின் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல், வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். குடிநீர் வசதி இன்றி சிரமப்படுகிறோம். ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி