உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உலக திறன் விளையாட்டு போட்டி: இளைஞர் சாதனை

 உலக திறன் விளையாட்டு போட்டி: இளைஞர் சாதனை

மேலுார்: அ.வல்லாளபட்டி சவுந்தரவேல், -மாலா தம்பதி மகன் பிரசாத் 28. தாய்லாந்தில் நடந்த உலக திறன் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று குண்டு, வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். கடந்த 2023ல் தாய்லாந்தில் நடந்த உலகப்போட்டியில் தங்கம், டில்லியில் 2023, 2025ல் நடந்த தேசிய போட்டியில் தங்கம், 2018 முதல் 2025 வரை தொடர்ந்து தேசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று வருகிறார். 'உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதித்து நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பதே தன் லட்சியம்' என்றார். அவரை கிராம மக்கள், தடகள பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ