உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

மதுரையில்   ஜன.8 முதல் 11 வரை உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு

மதுரை: மதுரையில் எழுமின் அமைப்பின் சார்பில் உலகத் தமிழ் தொழிலதிபர்களின் மாநாடு ஜன.8 முதல் 11 வரை நடக்கிறது. இதன் நிறுவனர் ஜெகத் கஸ்பர் கூறியதாவது: இம்மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தமிழ் தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள், வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை உலகச் சுற்றுலா நிகழ்வாக பரப்ப ஜல்லிக்கட்டு பேரவையுடன் இணைந்து ஜன.8ல் ஜல்லிக்கட்டு நடத்த உள்ளோம். கீழடியில் ஜன.11 உலகத் தமிழர் ஒற்றுமைப் பொங்கலுடன் மாநாடு நிறைவடைகிறது. பொங்கல் விழாவில் உலகத் தமிழர்கள் தங்களது நாட்டுக்கொடியினை ஏற்றுவதோடு, பிரத்யேக பானைகளில் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்படும். கீழடியில் நாட்டுப்புறக் கலைகள், பல்லுயிர் கண்காட்சிகள், குறு, சிறு நடுத்தர தொழில் பெண் முனைவோருக்கான விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். முதலீட்டாளர் திருவிழாவும் நடக்கிறது என்றார். அமைப்பின் தென் தமிழக இயக்குநர் பெரீஸ் மகேந்திரவேல், மாவட்ட தலைவர் சரவணன், அமெரிக்கத் தலைவர் பாலா சுவாமிநாதன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை