உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனை

குண்டுமல்லி கிலோ ரூ.500க்கு விற்பனை

எருமப்பட்டி: எருமப்பட்டியில் உள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் குண்டுமல்லி பூக்களை பயிரிட்டுள்ளனர். முகூர்த்த நாட்களில் கிலோ, 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். முகூர்த்த தினங்கள் இல்லாத மாதங்களில் பூக்கள் விலை குறைந்து கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக விசேஷ நாட்கள் இல்லா-ததால், மிக குறைந்த விலைக்கு விற்ற குண்டுமல்லி பூக்கள், நேற்று ஆடி வெள்ளியையொட்டி, நாமக்கல் பூ மார்க்கெட்டில் கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ